புவியெங்கும் பரவி… உயிர் நலம் வேண்டி… தவமிருந்த சித்தர்களை ஈன்ற புனித பாரதத்தில் தருமமிகு சென்னையில் அருட்பிரகாச வள்ளலார், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் போன்று பூக்கடை, தங்கசாலை, பாரிமுனை, உயர்நீதிமன்ற வளாகம் என பல இடங்களில் ஞான சூரியனாக வலம் வந்து கடுந்தவத்தால் உலகைக் காத்த உத்தம சித்தர் தாம் சத்குரு ஹைகோர்ட் அய்யா ஸ்ரீ ராஜராஜ சுவாமிகள் ஆவார்கள். 1975 ஆம் ஆண்டு முதல் சுமார் 30 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் தவமிருந்த மகாசுவாமிகளை நிறைய பக்தர்களும், அடியார் பெருமக்களும் சந்தித்து... உரையாடி... அருளாசி பெற்றுச் சென்றிருக்கின்றனர்.
அன்பு அடியார் பெருமக்களுக்கு, வணக்கம்...! சத்குரு ஸ்ரீ ராஜ ராஜ சுவாமிகள் ஜீவ சமாதி ஆலய கட்டுமான திருப்பணி நடந்து கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆலய கட்டுமான திருப்பணி தொய்வில்லாமல் நடந்து மிக விரைவில் நிறைவெய்த இதைக்காணும் அடியார் பெருமக்கள் அனைவரும் தங்களால் இயன்ற நன்கொடை அளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். மேலும் தங்களுக்குத் தெரிந்த அனைத்து அடியார் பெருமக்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களால் முடிந்த நன்கொடையை அறக்கட்டளையின் வங்கி கணக்கில் செலுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம். குறிப்பு : பொருளுதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தில் இருக்கும் அலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். பண உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தி அதை மறக்காமல் தெரியப்படுத்தவும். நன்றி!
நன்றி
s. அசோக் ராஜ்குமார்
நிறுவன அறங்காவலர் - தலைவர்