கோவில் திருப்பணிக்கு உதவி செய்வதால் கிடைக்கும் புண்ணியம்:

  • ஜீவசமாதி நிலை பெற்ற சித்தர்களின் ஆலய திருப்பணிக்கு மனமுவந்து உதவுவதால் அவர்களின் தீராப்பிணிகள் தீர வழி பிறக்கும். தரித்திரம் நீங்கி செல்வ வளம் மேலோங்கி தழைக்கும்.
  • கோயில் திருப்பணி, கும்பாபிஷேகம் போன்ற தெய்வ காரியங்களுக்கு பணம் அல்லது பொருள் உதவி செய்வது நம் குடும்பத்தை காப்பதற்காக நாம் செய்யும் முதன்மையான உயர்ந்த தெய்வீக காப்பீடு ஆகும். செய்த தர்மம் தலைகாக்கும். தெய்வதர்மம் நம் தலைமுறைைகளையே காக்கும்.
  • ஆம், ஜீவசமாதி ஆலய திருப்பணிக்கு மனமுவந்து உதவுவதால், நம் குடும்பத்தின் முன்னோர்கள், பித்ருக்கள் 'சாப விமோசனம்' பெற்று "ஒளி நிலை" அடைவார்கள். நம்மை வாழ்த்தி "வரம்" அருளுவார்கள். நம் தலைமுறைகள் நலமுடன் வாழும். ஏனெனில், முன்னோர்களின், பித்ருக்களின் அனுமதியும் அனுக்கிரகமும் இன்றி, ஒருவர் ஜீவசமாதிக்குள் காலடி வைக்கக்கூட முடியாது.
  • ஒரு ஜீவசமாதி பீடம் என்பது உத்தமமான, சத்தியமான, பேரண்டப் பிரபஞ்ச, பேரதிர்வு சக்தி மையங்கள் ஆகும். உலகினை எல்லா காலத்திலும், எந்த விதத்திலும் கட்டிக் காக்கும், காத்து ரட்சிக்கும் உயர் நிலை இறை ஆலயங்கள் ஆகும்.
Tai Images

Courtesy of Temple

Temple Volunteering

Temple Construction

  • ஜீவசமாதி ஆலய திருப்பணிக்கு, தம்மால் இயன்ற நன்கொடையை அன்புடன் வழங்குவதால், அந்த சாதகன் உண்மையின் பாதையில் வரவேற்கப்படுகிறான்... இறைவனின் பிள்ளையாக ஏற்கப்படுகிறான்... கர்ம வினையெனும் நெஞ்சத்துயரம் நீங்கி கடவுளருள் எனும் நித்தியானந்தம் தோன்றத்துவங்குகிறது... மாசற்ற மனத்தினனாய் மாறுகின்றான்... அன்பும் அறனும் உடைத்து என்றென்றும் பரமானந்தத்தில் திளைப்பவனாகின்றான்.
  • உடல்நலம், மனவளம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், குருவருளெனும் மெய்ஞானம் திருவருளெனும் சகல செல்வ யோகமிக்க ஞானப் பெருவாழ்வு எய்த வழி பிறக்கும்
  • ஐயம் நீங்கும்... அகப்பொருள் விளங்கும்... வாழ்வாங்கு வாழ்வு வையத்துள் கிடைக்கும் ...உள்ளொளி பெருகும்... சத்தியம் நிலைக்கும்... உத்தம ஞான சித்தர்களின் உயிர் உறவு கிடைக்கும்...
  • ஆல் போல் தழைத்து... அருகு போல் வேரூன்றி... வாழையடி வாழையென ஞான வம்சமதைப் பெற்றிடுவன்....
  • இன்னும்... இன்னும்... எத்தனையோ பேசவொண்ணா எழுதவொண்ணா பேரானந்த நிலைகள் தோன்றச் செய்யும், மகா திருப்பணி புண்ணியத்தில் பங்கு கொண்டு... மகா சித்தர்களின் அன்புக்கும் ,அருளுக்கும், தயவுக்கும் ,கருணைக்கும் பாத்திரமாவோம்....
வாருங்கள்..! அன்பு நெஞ்சங்களே..!
இரை தேடுவதோடு , இறையையும் தேடுவோம் ....
பல பணி இருப்பினும் , திருப்பணி செய்வோம்...
வாருங்கள்..! அன்பின் சொந்தங்களே..!